சிறப்புச்செய்திகள்:

தமிழில் மூடப்படும் பிரபல ஓடிடி தளம் ?

தமிழில் மூடப்படும் பிரபல ஓடிடி தளம் ?
Advertisement
எழுத்து அளவு
"பாராட்டு"க்கு மற்றொரு வார்த்தை கொண்ட ஓடிடி நிறுவனம் ஒன்று விரைவில் மூடப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. தெலுங்குத் திரையுலகத்தின் பெரிய குடும்பத்திற்குச் சொந்தமானது அந்த நிறுவனம். தெலுங்கில் மட்டுமல்லாது தமிழிலும் அவர்களது சேவையை ஓரிரு வருடங்களுக்கு முன்பு ஆரம்பித்தார்கள். சில படங்களை வாங்கி ஓடிடியில் வெளியிட்டார்கள். வெப் தொடர்களையும் தயாரித்தார்கள். ஆனால், உலக அளவில் பிரபலமாக உள்ள ஓடிடி தளங்களுடன் அந்த "பாராட்டு" ஓடிடி தளத்தால் போட்டி போட முடியவில்லையாம். அதனால், தமிழில் அவர்களது சேவையை நிறுத்திவிடலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளார்களாம். மற்ற பிரபலமான ஓடிடி நிறுவனங்கள் ஒரு குறிப்பிட்ட தொகையை வாங்கினால் அனைத்து மொழி சேவைகளையும் வழங்கி வருகின்றன. ஆனால், அந்த "பாராட்டு" ஓடிடி தளம் ஒவ்வொரு மொழிக்கும் தனித்தனியாக கட்டணம் வசூலிப்பதே அதன் தோல்விக்குக் காரணம் என ஓடிடி வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள். சரியான பணியார்களை வேலைக்கு எடுக்கவில்லை என்றாலும் தோல்வியைத் தழுவ நேரிடும் என்றும் மேலும் சொல்கிறார்கள். குறுகிய காலத்தில் ஒரு ஓடிடி நிறுவனம் ஆரம்பமாகி மூடப்படுவது தமிழ்த் திரையுலகினருக்கு இழப்புதான்.
Advertisement

கருத்து பதிவு செய்ய

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.

Advertisement

சினி வதந்தி

மீண்டும் இயக்குனரிடம் சரண்டர்

மீண்டும் இயக்குனரிடம் சரண்டர்

இயக்குனருடன் ஏற்பட்ட மோதலில் நடிகர் நடித்து வந்த, இரண்டாம் பாகம் படம், டிராப் ஆகிவிட்டது. மீதி படத்தை நானே இயக்கி நடிக்கப் போகிறேன்... என்று சொல்லி, சில நாட்கள் படப்பிடிப்பு

ராசி பட விழா ரத்துக்கு காரணம் இதுதானா ?

ராசி பட விழா ரத்துக்கு காரணம் இதுதானா ?

தமிழ் சினிமாவில் அடுத்த சூப்பர் ஸ்டார் என கமாண்டர் நடிகரை அவரது ரசிகர்கள் சொல்லி வருகிறார்கள். ராசி பெயர் கொண்ட தனது அடுத்த படத்தில் சிறைக்காப்பாளர் படத்தை விடவும் அதிக

அடிக்கடி எஸ்கேப் ஆகும் சங்க செயலாளர்

அடிக்கடி எஸ்கேப் ஆகும் சங்க செயலாளர்

நடிகர்கள், நடிகைகள் சரியாக படப்பிடிப்புகளுக்கு வராமல் டிமிக்கி கொடுத்தால் அது பற்றி புகார் அளிப்பதற்கு ஒரு சங்கம் இருக்கிறது. ஆனால், அந்த சங்கத்தின் செயலாளரே காணாமல் போனால்

Advertisement

Advertisement
Copyright © 2025 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map